டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா..?

 நாம் பணம் எடுக்க ஏடிஎம் மையங்களுக்கு செல்லும் போது, பல நேரங்களில் ஏடிஎம் கார்டுகளை எடுத்து செல்ல மறந்துவிடுவோம்… ஆனால் இனிமேல், நீங்கள் உங்கள் ஏடிஎம் டெபிட் கார்டை மறந்துவிட்டால் ஏமாற்றமடைய வேண்டாம். ஏனெனில் டெபிட் கார்டு இல்லாமல் கூட ஏடிஎம்-ல் இருந்து உங்கள் பணத்தை எடுக்க முடியும். ஆம்.. பல வங்கிகள் ஏடிஎம்களில் அட்டை இல்லாத பணப்பரிவர்த்தனை முறையை அறிமுகம் செய்துள்ளது.

எஸ்பிஐ, பாங்க் ஆப் பரோடா மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய வங்கிகள் இந்த கார்டுலெஸ் பணப்பரிவர்த்தனையை அறிமுகம் செய்துள்ளன. எனினும் இந்த வசதி, சம்மந்தப்பட்ட வங்கியின் ஏடிஎம்மில் மட்டுமே கிடைக்கும். வேறு எந்த வங்கியின் ஏடிஎம்மிலிருந்தும் இந்த வசதியை நீங்கள் பெற முடியாது. இந்த புதிய வசதியை பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரியாததால், அவர்கள் எவ்வாறு சேவைகளை பயன்படுத்தலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.



ஏடிஎம் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வழிமுறைகள் :


✅முதலில் உங்கள் வங்கி அட்டை இல்லாத பணப்பரிவர்த்தனை அதாவது card-less cash withdrawal வசதியை அளிக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.உங்கள் வங்கி இந்த வசதியை வழங்கினால், அதன் பயன்பாட்டு செயலியை பதிவிறக்கவும்.


நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால், YONO என்ற ஆப்பை பதிவிறக்க வேண்டும்.அந்த ஆப்பில் ‘YONO cash option’, என்பதை தேர்வு செய்து, ‘cash on mobile’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்..


நீங்கள் பாங்க் ஆப் பரோடாவின் வாடிக்கையாளராக இருந்தால், BOB MConnect plus என்ற ஆப்பை பதிவிறக்க வேண்டும்.பின்னர் ‘card-less cash withdrawal’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், iMobile app-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் ‘card-less cash withdrawal’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


அதன்பின்னர், நீங்கள் எவ்வளவு பணம் எடுக்க விரும்புகிறீர்கள் என்பதை பதிவு செய்து, பின்னர் வங்கி பயன்பாட்டின் பின்னை உள்ளிட வேண்டும்.


உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வங்கி ஒரு OTP எண்ணைஐ அனுப்பும், இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இருக்கும்.இதற்குப் பிறகு, உங்கள் வங்கியின் ஏடிஎம்-க்குச் செல்லுங்கள்


card-less cash withdrawal என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்து, உங்களுடைய கைபேசி எண்ணை உள்ளிடவும். மொபைல் எண்ணிற்கு வந்த OTP- எண்ணை ஐ உள்ளிடவும்


ஆப்-ல் நீங்கள் நிரப்பிய அதே பணத் தொகையை உள்ளிட வேண்டும்.அவ்வளவு தான் பணப்பரிவர்த்தனை முடிந்தது



அட்டை இல்லாத ஏடிஎம் நன்மைகள் : இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், டெபிட் கார்டை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் ஏடிஎம் மோசடிகளை தவிர்ப்பதுடன், ஏடிஎம் குளோனிங் போன்ற அபாயத்தையும் குறைக்கமுடியும்.


No comments:

Powered by Blogger.