குழந்தைகளுக்கு பான் கார்டு பெறுவது எப்படி?

 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பான் கார்டு எப்படி பெறுவது என்பதை இப்போது பார்ப்போம்.




நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளையும் செய்வதற்கு இன்றியமையாத ஆவணமாகும். வங்கிக் கணக்கைத் திறக்க, சொத்து வாங்க அல்லது ஏதேனும் அரசாங்க நிதிக் கருவிகளில் முதலீடு செய்ய பான் கார்டு உதவுகிறது. இது நாட்டில் அடையாள ஆவணமாகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.



பெரும்பாலும் சம்பளதாரர்களும், தொழில் செய்பவர்களும் மட்டுமே பான் கார்டுக்கு விண்ணப்பித்து, அதனை பெற்றுக்கொள்வார். அதாவது வரி செலுத்த, வங்கிக் கணக்கு தொடங்க, வேலை அல்லது தொழில் தொடங்க பான் கார்டு தேவைப்படும். இருப்பினும், ஒருவர் தனது சட்டப்பூர்வ வயதை அடையும் போது வழக்கமாக 18 வயதிற்குப் பிறகு பான் கார்டு பெறலாம். ஆனால் நீங்கள் 18 வயதுக்கு கீழ் உள்ள உங்கள் குழந்தைகளுக்கும் பான் கார்டு பெறலாம். ஒரே விஷயம் என்னவென்றால், இங்கே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சார்பாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.



PAN கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


NSDL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.


மைனர் வயது சான்று மற்றும் பெற்றோரின் புகைப்படம் போன்ற பிற முக்கிய ஆவணங்கள் உட்பட சரியான வகையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இணையதளத்திற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் நிரப்பவும்.


பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


பின்னர் விண்ணப்பக் கட்டணம் 107 ரூபாயை செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்கவும்.


இப்போது உங்களுக்கு ஒரு ரசீது எண் கிடைக்கப் பெறும். இதனைக் கொண்டு உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் கண்காணிக்கலாம். அதாவது விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை தெரிந்துக் கொள்ளலாம்.


அனைத்து சரிபார்ப்புகளும் வெற்றிகரமாக முடிந்த 15 நாட்களுக்குள் பான் கார்டு உங்களுக்கு கிடைக்கப் பெறும்.


தேவையான ஆவணங்கள்


குழந்தையின் பெற்றோரின் முகவரி மற்றும் அடையாளச் சான்று


விண்ணப்பதாரரின் (குழந்தையின்) முகவரி மற்றும் அடையாளச் சான்று


இதில் குழந்தையின் பாதுகாவலர் என்பதற்கான அடையாளச் சான்றாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்.


ஆதார் அட்டையின் நகல், தபால் அலுவலக பாஸ்புக், சொத்து பதிவு ஆவணம் அல்லது அசல் இருப்பிட சான்றிதழை முகவரி சான்றாக சமர்ப்பிக்க வேண்டும்.


உங்கள் குழந்தை உங்கள் முதலீட்டின் நாமினியாக இருந்தாலோ அல்லது குழந்தையின் பெயரில் முதலீடு செய்யப்பட்டாலோ குழந்தைகளுக்கான PAN அட்டை பயனுள்ளதாக இருக்கும்.


No comments:

Powered by Blogger.