உங்கள் ஆண்ட்ராய்ட் ஃ போன் தொலைந்துவிட்டதா? Google Pay மற்றும் Paytm கணக்கை எவ்வாறு பாதுகாப்பது?

 உங்கள் ஃபோனை நீங்கள் தொலைத்துவிட்டால், உங்கள் தரவை யாராவது பயன்படுத்தக்கூடும் என்கிற அச்சம் எழும். உங்கள் Google Pay அல்லது Paytm கணக்கை லாக் செய்வதற்கு கடவுக்குறியீடு அல்லது ஸ்க்ரீன் லாக் பயன்படுத்தினாலும், அவற்றை யாரும் திறக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் டிஜிட்டல் பேமென்ட் கணக்குகளை ரிமோட் மூலம் அகற்ற அல்லது தடுக்க வழிகள் உள்ளன. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.



Paytm: சாதனங்களிலிருந்து உங்கள் கணக்கை எவ்வாறு அகற்றுவது?


Paytm பயனர்கள், எல்லா சாதனங்களிலிருந்தும் வெளியேறலாம். ஆனால் அதற்கு, ஒருவர் தங்கள் கணக்கின் கடவுச்சொல் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதை நீங்கள் நினைவில் வைத்திருந்தால், உங்கள் Paytm கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களிலிருந்தும் நீங்கள் எவ்வாறு வெளியேறலாம் என்பதை இனி பார்ப்போம்.


#முதலில் ஏதேனும் இரண்டாம் நிலை சாதனத்தில் Paytm செயலியை நிறுவி பின்னர் உள்நுழையவும்.


#இப்போது, ​​திரையின் மேல் இடதுபுறத்தில் இருக்கும் ஹாம்பர்கர் மெனுவை க்ளிக் செய்யவும். அங்கு நீங்கள் “சுயவிவர அமைப்புகள்” டேபை கிளிக் செய்ய வேண்டும்.


#இந்தப் பிரிவின் கீழ், நீங்கள் பல விருப்பங்களைக் காணலாம். பயனர்கள் “பாதுகாப்பு மற்றும் தனியுரிமை” என்பதைக் கிளிக் செய்து, “அனைத்து சாதனங்களிலும் கணக்குகளை நிர்வகி” விருப்பத்தைத் தட்டவும்.


#நீங்கள் அதை க்ளிக் செய்ததும், பயன்பாடு ஒரு செய்தியைக் காண்பிக்கும். இது எல்லா சாதனங்களிலிருந்தும் வெளியேறுவது உறுதியா என்று கேட்கும். அதன்படி “ஆம்” அல்லது “இல்லை” என்பதை அழுத்தலாம்.


மாற்றாக, Paytm-ன் ஹெல்ப்லைன் எண்ணான “01204456456”-ஐ டயல் செய்யலாம். நீங்கள் அந்த அழைப்பை மேற்கொண்டால், உங்கள் வினவல் பற்றிய பல விருப்பங்கள் உங்களுக்கு வழங்கப்படும். மேலும், “தொலைபேசி தொலைந்துவிட்டது” என்ற விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, வேறு எண்ணை உள்ளிடுவதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்து, உங்கள் தொலைந்த தொலைபேசி எண்ணை உள்ளிடவும். இப்போது நீங்கள் அனைத்து சாதனங்களிலிருந்தும் வெளியேறலாம்.


மேலே குறிப்பிட்டுள்ள முறையைப் பயன்படுத்தி உங்கள் கணக்கு வெளியேறுமா என்பது குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் Paytm கணக்கைத் தற்காலிகமாகத் தடுக்கலாம். ஒருவர் தங்கள் Paytm கணக்கைத் தடுக்க கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.


Paytm: கணக்கைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது எப்படி?


#எல்லா சாதனங்களிலிருந்தும் வெளியேறிய பிறகு, பயனர்கள் Paytm இணையதளத்திற்குச் சென்று ’24×7 உதவியைத் தேர்வுசெய்யலாம்.’ இதற்குப் பிறகு, “மோசடியைப் புகாரளிக்கவும்” என்பதைத் தேர்ந்தெடுத்து விரும்பிய வகையைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது, ​​’எங்களுக்குச் செய்தி அனுப்பு’ பட்டனை கிளிக் செய்து, கணக்கு உரிமைக்கான ஒரு சான்றினைச் சமர்ப்பிக்கவும். அதன் பிறகு, Paytm இருமுறை சரிபார்த்து உங்கள் கணக்கைத் தடுக்கும். Paytm பரிவர்த்தனையின் மின்னஞ்சல் அல்லது SMS, ஃபோன் எண் உரிமைக்கான சான்று மற்றும் பலவற்றைப் பகிரலாம்.


உங்கள் தொலைந்த மொபைலில் இருந்து Google Pay-ஐ அகற்ற அல்லது தடுக்க வேண்டுமா?


அதைச் செய்வதற்கான சிறந்த மற்றும் எளிமையான வழி, உங்கள் ஆண்டிராய்டு ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் எல்லா தரவையும் தொலைவிலிருந்து அழிப்பதுதான். மற்றொரு சாதனத்திலிருந்து உங்கள் எல்லா தரவையும் நீக்குவதற்கான விருப்பத்தை கூகுள் வழங்குகிறது. உங்கள் ஃபோனை தொலைத்துவிட்டால், உங்கள் டேட்டாவைப் பற்றி கவலைப்பட்டால் இது ஒரு நல்ல அம்சம். உங்கள் ஆண்டிராய்டு ஃபோன் தரவை தொலைவிலிருந்து கண்டுபிடிக்க, லாக் செய்ய அல்லது அழிக்க, “android.com/find” என்பதற்குச் சென்று உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழையவும். முடிந்ததும், தரவை அழிப்பதைத் தேர்வுசெய்யலாம்.


மாற்றாக, ஒருவர் வாடிக்கையாளர் சேவையின் உதவியையும் பெறலாம். Google Pay பயனர்கள் 18004190157 என்ற எண்ணை டயல் செய்து “பிற சிக்கல்கள்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் கூகுள் கணக்கைத் தடுக்க உதவும் நிபுணரிடம் பேசுவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அதற்கு முன், உங்கள் பதிவு செய்யப்பட்ட கூகுள் கணக்கின் மொபைல் எண்ணைச் சரிபார்க்கும்படி கேட்கப்படுவீர்கள்.



No comments:

Powered by Blogger.