கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைப் பெறுவது எப்படி?

 இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் பயணம் மேற்கொள்ளும் போது மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் பயணிகளிடம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் கையில் இருக்க வேண்டும் என்ற சூழல் இப்போது உள்ளது. 


திட்டமிட்ட பயணம் என்றால் எல்லாவற்றையும் கையில் சரியாக வைத்திருப்போம். திடீர் பயணம் மேற்கொள்பவர்கள் சோதனை சாவடிகளில் கோவிட்- சர்டிபிகேட் இல்லாமல் சங்கடப்படும் சூழல் உள்ளது.




கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பல வழிகளில் நம்மால் தரவிறக்கம் செய்ய முடியும். கோவின் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம், ஆரோக்கிய சேது அல்லது உமாங்க் செயலிகளின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம், டிஜிலாக்கர் தளத்தின் மூலமும் பதிவிறக்கம் செய்யலாம்.

 எதுவுமே இல்லை என்றால் வாட்ஸ்அப்பின் மூலம் கூட கொரோனா தடுப்பூசிச் சான்றிதழைப் பெற முடியும். கோவின் இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழ் பெறுவது எப்படி என்பது குறித்த வழிமுறைகளைப் பார்க்கலாம்.


அந்த சமயத்தில் Message Inbox-க்குள் சென்று தடுப்பூசி போட்ட நாளில் அனுப்பிய லிங்க் தேடுவது, கோவின் தளத்தில் சென்று செல்போன் எண்ணை பதிவு செய்து ஒவ்வொருவருக்கும்  கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் எடுக்கும் பணிகளில் ஈடுபடுவது சிரமத்தை ஏற்படுத்தும். செல்போன்  சிக்னல் சரியாக இல்லையென்றால் மேலும் கால தாமதமாகும்.


இதுபோன்ற சூழலை தவிர்க்க வாட்ஸ்அப்பில் எளிய  முறையில் சான்றிதழை பெறும் வசதியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. MYGOV CORONA HELPDESK மூலம் மிக எளிதாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை பெறலாம்.


வாட்ஸ்அப்பில்  Covid Certificate பதிவிறக்கம் செய்வது எப்படி?

+91 9013151515 என்ற எண்ணை செல்போனில் பதிவு செய்து கொள்ளவும்


இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் இருந்து Covid Certificate என டைப் செய்து மெசேஜ் அனுப்பவும்


உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணை பதிவு செய்ய வேண்டும்


அதன்பின் ஒரு குறுஞ்செய்தி வரும். நீங்கள் 1 என டைப் செய்து அனுப்பினால் சான்றிதழ் கிடைத்துவிடும்.இந்த சேவையின் மூலம் கொரோனா தடுப்பூசி  சான்றிதழை மிக வேகமாகவும் எளிதாகவும் பெற முடியும்.



கோவின் இணையதளம் மூலம் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?



முதலில் கோவின் இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும் (இணையதளப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்)


மேல்பக்கம் வலதுபுற மூலையில் இருக்கும் Register / Sign in-ஐ கிளிக் செய்ய வேண்டும்.



அதனைத் தொடர்ந்து தோன்றும் பக்கத்தில் நமது மொபைல் எண்ணைக் கொடுத்து, அதற்கு வரும் OTP-யையும் உள்ளீடு செய்ய வேண்டும்.


அதன் பின்னர் வரும் பக்கத்தில் நாம் எத்தனை டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கிறோம், எந்தத் தடுப்பூசியைச் செலுத்தியிருக்கிறோம் போன்ற நம்முடைய விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதன்கீழே Certificate என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதைக் கிளிக் செய்தால் நம்முடைய தடுப்பூசிச் சான்றிதழ் பதிவிறக்கம் ஆகிவிடும்.


COVID19 | COVID19VACCINATION | CORONA VACCINATION CERTICATE 

No comments:

Powered by Blogger.