உங்களின் பான் கார்டு ஒரிஜினலா போலியா? கண்டுபிடிப்பது எப்படி?

 பான் கார்டு என்பது தனிமனிதரின் மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் கார்டு போல நாட்டிலுள்ள அனைவருக்குமே பான் கார்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பணப் பரிவர்த்தனை, வருமான வரி போன்ற விஷயங்களில் பான் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. 


வரி மோசடிகளைக் கண்டுபிடிக்கவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் பான் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. வங்கிக் கணக்கு, ஆதார் போன்ற பல்வேறு விஷயங்களில் பான் கார்டை இணைப்பது கட்டாயமாகும்.





வருமான வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கு போன்ற பல விஷயங்களுக்கு பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது.10 இலக்கில் உள்ள எண் கொண்ட இந்த பிளாஸ்டிக் பான் கார்ட்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும். பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இத்தகைய முக்கிய ஆவணமான பான் கார்டை, போலியான விநியோகித்து பண மோசடியில் சம்பவங்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.



எனவே, இதனை தடுக்கும் நோக்கில் ஜூலை 2018க்கு பிறகு விநியோகிக்கப்பட்ட அனைத்து பான் கார்டுகளிலும் Enhanced Quick Response (QR) code பதிக்கப்பட்டுள்ளது. பான் கார்டில் உள்ள QR code மூலமாக அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய முடியும். நீங்கள் வைத்திருக்கும் பான் கார்டு ஒருவேளை போலியானதா இருக்கலாம். அதனை ஆன்லைன் மூலம் கண்டறியும் ஈஸி வழியை இச்செய்தி தொகுப்பில் காணலாம்



❎கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் PAN QR code Reader என்ற மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ளவும்.




❎இந்த வார்த்தையை போட்டு தேடுகையில் பல செயலிகள் ஒரே பெயரில் வரலாம். ‘NSDL e-Governance Infrastructure Limited’ஆல் தயாரிக்கப்பட்ட செயலியா என்பதை பார்த்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.




❎இந்த ஆப் ஓப்பன் செய்தவுடன் பச்சை நிற பிளஸ் குறியீட்டுடன் கேமரா ஓப்பன் ஆகும்.கேமராவில் உங்களுடைய பான் கார்டை காட்டி, அதிலுள்ள QR code-ஐ ஸ்கேன் செய்யவும்.



❎ஸ்கேன் ஆனவுடன் பான் கார்டு தொடர்பான விவரங்கள் காண்பிக்கப்படும்.உங்களுடைய பான் கார்டில் உள்ள விவரங்களும் மொபைல் ஆப்பில் வந்த விவரங்களும் சரியாகப் பொருந்தினால் உங்களுடைய பான் கார்டு ஒரிஜினல்தான்.



❎ஒருவேளை தகவல்கள் வேறுபட்டு இருந்தால் நீங்கள் வேறொரு பான் கார்டு வாங்குவது நல்லது. வருமான வரித் துறை வெப்சைட்டிலேயே அதற்கான வசதி உள்ளது.




PAN Card | Pan | QR Code | Banking and Finance 

No comments:

Powered by Blogger.