தமிழக அரசின் வனத்துறையில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 தமிழக அரசின் வனத்துறையின் கீழ் சென்னை வண்டலூரில் செயல்பட்டு வரும், வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் (Advanced Institute for Wildlife Conservation) இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் 2 வருட காலத்திற்கு நிரப்படும். தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும். தகுதியுள்ளவர்கள் 05.12.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship)


காலியிடங்களின் எண்ணிக்கை: 03


கல்வித் தகுதி : M.Sc/M.tech in Zoology or wildlife biology or Biotechnology or Molecular biology or M.V.Sc in Anatomy படித்திருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ. 25,000 – 30,000


வயதுத் தகுதி : 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST/BC/MBC, பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு.


தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 10.12.2021 அன்று நடைபெறும்.


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.aiwc.res.in/assets/images/JRF%20-%20Application%20Form.pdf  என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


மின்னஞ்சல் முகவரி : aiwcrte@gmail.com


விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.12.2021


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.aiwc.res.in/assets/images/Announcement%20(Revised).pdf  என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


No comments:

Powered by Blogger.