லேப்டாப்ல வேகத்தை அதிகப்படுத்த 5 சிம்பிள் டிப்ஸ்

 கொரோனாவால் பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தப்படி வேலை செய்கின்றனர். நீண்ட நேரம் பணி செய்கையில், சில நேரங்களில் கணினியின் வேகம் குறைந்து காணப்படும். இது அவர்களது வேலையை பாதிப்பது மட்டுமின்றி கவனத்தை சிதறடிக்க நேரிடுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்கும் சில டிப்ஸ்கள் இந்தச் செய்தி தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், லேப்டாப்பின் வேகத்தை அதிகரித்து, எளிதாக பணியினை செய்யலாம்.



பயன்படுத்தாத சாப்ட்வேர்களை கிளோஸ் செய்ய வேண்டும்


நீங்கள் சிஸ்டமில் பயன்படுத்தாமல், சும்மா ஓப்பனாகியிருக்கும் சாப்ட்வேர்கள், உங்களது கணினி திறனை தேவையின்றி உபயோகிக்கிறது. அதனை நீங்கள் கிளோஸ் செய்யும் பட்சத்தில், உங்கள் கணினியின் வேகம் அதிகரிப்பதை எளிதாக காண இயலும்.


அனைத்து சாப்ட்வேர்களையும் X பட்டன் அழுத்தி கிளோஸ் செய்திட இயலாது. சில சமயங்களில் நமக்கே தெரியாமல் பேக்கிரவுண்டில் சாப்ட்வேர் இயங்கி கொண்டிருக்கும். அதனை, Ctrl+Shift+Esc பட்டனை சேர்த்து அழுத்தவதன் மூலம் எளிதாக காணலாம். திரையில் தோன்றும் விண்டோஸ் டாஸ்க் மேனஜரில், சிஸ்டமில் என்னென்ன சாப்ட்வர்கள் இயங்கி கொண்டிருப்பதை காணலாம். அதனை கிளிக் செய்து end task கொடுக்க வேண்டும்.


பிரவுசரில் தேவையற்ற பக்கங்களை மூடுதல்


பணியின் போது, உங்களது பிரவுசரை நீண்ட நேரம் திறந்து வைக்க வேண்டிய நிலை ஏற்படும். அச்சமயத்தில், கணினியின் வேகம் குறைந்தால், பிரவுசரில் திறந்திருக்கும் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்க வேண்டும். அதிகப்படியான இணைய பக்கங்கள் திறப்பால், ரெம் மற்றும் பிராசரில் அதிகளவில் திறன் உபயோகிப்பதால், சிஸ்டர் ஸ்லோவாகி விடும்.


சிஸ்டம் ரிஸ்டார்ட்


உங்களின் பழைய கணினியின் வேகத்தை அதிகரிக்க, மிகவும் எளிமையான வழி சிஸ்டம் ரிஸ்டார்ட் செய்வது தான். அதன் மூலம், சிஸ்டமில் Cache டெலிட் ஆகுவதால், கணினியின் வேகம் மீண்டும் அதிகரிக்ககூடும். ஆனால், விண்டோஸூடன் எதேனும் சாப்ட்வேர்கள் ஸ்டார்ட் ஆகும் வகையில் சேடிங் இருக்கும் பட்சத்தில்,ரிஸ்டார்ட் செய்தாலும் மீண்டும் கணினியின் வேகம் குறைய வாய்ப்புள்ளது.


ஸ்டார்ட்அப் சாப்ட்வேர்கள் செக் செய்வது அவசியம்


கணினி ஸ்டார்ட் செய்கையில் விண்டோஸூடன் சில சாப்ட்வேர்கள் தானாகவே தொடங்கும். இவற்றால் கணினியின் பிராசஸில் பாதிப்பு ஏற்படும். இந்த சாப்ட்வேர்கள் உங்களுக்கு தெரியாமலே கணினியின் செயல்திறன் உபயோகிக்கப்படுகிறது.


நீங்கள் Ctrl+Shift+Esc என்பதை சேர்த்து அழுத்துவதன் மூலம் டாஸ்க் மேனேஜர் திரை சிஸ்டமில் தோன்றும். அதில், ஸ்டார்ட்அப் டேபில் எந்த சாப்ட்வேர்கள் இயங்கிகொண்டிருக்கிறது என்பதை காண முடியும். அவை தேவையில்லாத பட்சத்தில், அதனை அப்பட்டியிலில் இருந்து நீக்க வேண்டும்.


தேவையில்லாத சாப்ட்வேர்களை நீக்குங்கள்


இது மிகவும் ஈஸியான வழி. அதே சமயம், கணினியில் வேகம் அதிகரிப்பதில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தேவையில்லாமல் நீண்ட காலமாக சிஸ்டமில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள கேம்ஸ் மற்றும் சாப்ட்வேர்களை, அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும். அப்படி செய்கையில், கணினியின் ரெம் தேவையில்லாதவற்கு உபயோகமாகுவதை தடுத்திட முடியும்.

No comments:

Powered by Blogger.